தனுஷின் ‘கர’: அதிரடியில் மிரட்டும் முன்னோட்டக் காட்சி வெளியீடு

தனுஷின் ‘கர’: அதிரடியில் மிரட்டும் முன்னோட்டக் காட்சி வெளியீடு

1 mins read
89384532-2538-4eef-be11-d0042132b1c1
‘கர’ படக் காட்சி. - படம்: பின்டர்ரஸ்ட்
multi-img1 of 2
Google News Preferred Icon

நடிகர் தனுஷ் நடிப்பில் நீண்ட நாள்களாக எதிர்பார்க்கப்பட்ட ‘கர’ திரைப்படத்தின் அதிகாரபூர்வ முன்னோட்டக் காட்சி அண்மையில் வெளியிடப்பட்டு இணையத்தையே அதிரவைத்துள்ளது.

‘பிரேமலு’ புகழ் மமிதா பைஜு, தனுசுக்கு ஜோடியாக இந்தப் படத்தில் நடித்துள்ளார். ஒரு போர்க்காலச் சூழலில் சிக்கித் தவிக்கும் ஒரு கொள்ளையன், எப்படி பெரிய மீட்புப் போராளியாக மாறுகிறான் என்பதுதான் இந்தப் படத்தின் கதைக் களம்.

விளம்பர முன்னோட்டத்தில் தனுஷின் கரடுமுரடான தோற்றத்துடன் அவரது கண்கள் வழியே வெளிப்படும் கோபம் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

சூர்யா வெஞ்சாரமூடு, மனு ஆனந்த் ஆகியோர் மிக முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படத்தின் ஒளிப்பதிவு, சண்டைக்காட்சிகள் ஹாலிவுட் தரத்தில் இருப்பதாக ரசிகர்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

ஜி.வி. பிரகாஷ் குமாரின் அதிரடியான பின்னணி இசை முன்னோட்டக் காட்சிக்குப் பலம் சேர்த்துள்ளது.

இம்மாதம் (ஏப்ரல்) 30ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் இப்படம் வெளியாகவுள்ளது. தனுஷ் இயக்கத்தில் உருவான ‘ராயன்’ படத்திற்குப் பிறகு, அதிரடி அவதாரத்தில் அவர் நடிக்கும் இந்தப் படம் அவரது திரைப்பயண வாழ்க்கையில் மற்றொரு முக்கியமான மைல்கல்லாக இருக்கும் எனத் திரை விமர்சகர்கள் கணித்துள்ளனர்.

‘கர’ படக் காட்சி.
‘கர’ படக் காட்சி. - படம்: பின்டர்ரஸ்ட்
குறிப்புச் சொற்கள்