ரூ.35 கோடி வசூலித்த ‘கேப்டன் பிரபாகரன்’

ரூ.35 கோடி வசூலித்த ‘கேப்டன் பிரபாகரன்’

1 mins read
6df226ac-005e-4937-b29b-eff438c8742d
‘கேப்டன் பிரபாகரன்’ படத்தில் நடிகர் விஜய்காந்த். - படம்: சமூக ஊடகம்
Google News Preferred Icon

ஆர்.கே. செல்வமணி இயக்கத்தில் விஜயகாந்த் நடிப்பில் கடந்த 1991ஆம் ஆண்டு வெளியான படம் ‘கேப்டன் பிரபாகரன்’.

இது விஜயகாந்தின் 100வது படமாகும். இப்படத்தின் மூலம்தான் விஜய்காந்திற்கு ‘கேப்டன்’ என்ற அடைமொழி கிடைத்தது.

இந்தப் படத்தில் சரத்குமார், மன்சூர் அலிகான், ரூபிணி, லிவிங்ஸ்டன், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடித்திருந்தனர்.

விஜயகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு ‘கேப்டன் பிரபாகரன்’ படம் 34 ஆண்டுகள் கழித்து கடந்த ஆகஸ்ட் மாதம் 22ஆம் தேதி மீண்டும் திரையில் மறுவெளியீடு செய்யப்பட்டது.

மறுவெளியீடு செய்யப்பட்ட 24 நாள்களில் மட்டும் ‘கேப்டன் பிரபாகரன்’ திரைப்படம் கிட்டத்தட்ட ரூ.35 கோடி வசூலித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், அப்படம் வெற்றிகரமாக 25வது நாளில் அடியெடுத்துவைத்துள்ளது. அதற்காகப் படக்குழு புதிய சுவரொட்டி ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்