அசோக் செல்வன், நிமிஷா சஜயன் நடிப்பில், அறிமுக இயக்குநர் மணிகண்டன் ஆனந்தன் இயக்கியுள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
‘மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ்’ மற்றும் ‘வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல்’ இணைந்து தயாரிக்கும் இப்படம், அசோக் செல்வனின் திரைப்பயணத்திலேயே அதிகப் பொருள்செலவில் உருவாகும் ‘காதல் கலந்த மர்ம’ படமாகும்.
பெரும்பாலான காட்சிகள் இரவு நேரங்களில் படமாக்கப்பட்டுள்ளன. இப்படத்திற்கு திபு நினன் தாமஸ் இசையமைக்கிறார்.
தற்போது பின்னணிப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் தலைப்பு மற்றும் முதல் சுவரொட்டி விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

