இருளில் மூழ்கிய மாமல்லபுரம்

இருளில் மூழ்கிய மாமல்லபுரம்

1 mins read
03c28fb5-030e-473d-9492-96daf3aaf144
முன்பு பெய்த மழையின்போது மாமல்லபுரம் புலிக்குகை பகுதியில் தேங்கிய மழை நீர். - படம்: ஊடகம்
Google News Preferred Icon

சென்னை: மாமல்லபுரம் பகுதியில் இன்று (நவம்பர் 30) அதிகாலை முதல் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அவதிக்கு ஆளாகினர்.

இதையடுத்து மழைக்கால மின் பாதுகாப்பு நடைமுறைகளை விவரித்து தமிழக மின்வாரியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஃபெங்கல் புயல் இன்று மாலைக்குள் மாமல்லபுரம், காரைக்கால் இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பாதுகாப்பு நடவடிக்கையாக மாமல்லபுரம், அதன் சுற்றவட்டார பகுதிகளில் இன்று அதிகாலை 4 மணி முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

“மேலும் தாழ்வாக தொங்கி கொண்டிருக்கும் மின் கம்பிகள் அருகில் செல்வதையும் தொடுவதையும் தவிர்க்க வேண்டும். சாலைகளில் மின் கம்பங்கள் அருகே தேங்கியுள்ள தண்ணீரில் நடப்பது, விளையாடுவது, வாகனங்களில் செல்வது கூடாது.

“வீட்டில் உள்ள மின்சார இணைப்புகளுக்கான சுவிட்சுகளை ஈரமான கைகளுடன் தொட வேண்டாம். நீரில் நனைந்துவிட்ட மின்விசிறி, மின் விளக்குகள் ஆகியவற்றை மின்சாரம் வந்தவுடன் உடனடியாக இயக்குவது கூடாது,” என்று மின்வாரியம் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

இதற்கிடையே, மாமல்லபுரத்தில் வரலாறு காணாத மழை பெய்யக்கூடும் என்றும் அப்பகுதியில் புயல் கடும் சேதங்களை ஏற்படுத்தும் என்றும் சமூக ஊடகங்கள் மூலம் சிலர் பரப்பும் வதந்திகளை நம்ப வேண்டாம் என அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்