பாலிவுட்​டில் அனுபமா பரமேஸ்வரன்

பாலிவுட்​டில் அனுபமா பரமேஸ்வரன்

1 mins read
4cd74ccf-f844-46bf-8ba6-43de8a737bfb
‘டிராகன்’, ‘பைசன்’, உள்ளிட்ட பல தமிழ்ப் படங்​களில் நடித்​தவர் அனுபமா பரமேஸ்வரன். - படம்: எக்ஸ்/அனுபமா பரமேஸ்வரன்

‘கொடி’, ‘தள்​ளிப் போகாதே’, ‘சைரன்’, ‘டிராகன்’, ‘பைசன்’, உள்ளிட்ட பல தமிழ்ப் படங்​களில் நடித்​தவர் அனுபமா பரமேஸ்வரன்.மலை​யாளம், தெலுங்குப் படங்களிலும் அவர் நடித்து வரு​கிறார்.

தற்போது அனுபமா பாலிவுட்​டிலும் அறிமுகமாகவுள்ளார்.அவர் உளவியல் சார்ந்த அச்சமூட்டும் கதைக்களம் கொண்ட படத்​தில் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அந்தப் படத்தை ஷான் இயக்​கு​கிறார்.

பாலிவுட்​டில் ‘ரஸ்​டம்’, ‘டாய்​லெட்: ஏக் பிரேம் கதா’ஆகிய படங்​களைத் தயாரித்தவர்கள் இப்படத்தைத் தயாரிக்கிறார்கள்.

இப்​படம் தமிழ், தெலுங்​கு, மலை​யாள மொழிகளி​லும் திரையிடத் திட்டமிடப்பட்டுள்ளது. படப்​பிடிப்பு மே மாதம் தொடங்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“அனுபமா பரமேஸ்​வரனுடன் இணைவதைச் சிறப்​பான​தாக உணர்கிறோம். பல மொழிகளில் நடித்து வரும் அவர் திறமையானவர். இந்​தப்படம் ஒரு நடிகையாக அவருக்​குச் சிறப்பானதாக இருக்​கும்,” என்று படத்தின் தயாரிப்புக் குழு தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திசினிமாகதை

தொடர்புடைய செய்திகள்