‘குட் பேட் அக்லி’ படத்துக்குப் பிறகு அஜித்தின் அடுத்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
ஆதிக் ரவிச்சந்திரன்தான் படத்தை இயக்கப் போகிறார் என்பது முடிவாகிவிட்டது என்றாலும் தயாரிப்பாளர் யார் என்பது இன்னும் உறுதியாகவில்லை.
மைத்ரி மூவி மேக்கர்ஸ், சத்யஜோதி பிலிம்ஸ், வேல்ஸ் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் அஜித்தை வைத்துப் படம் எடுப்பதில் ஆர்வம் காட்டின. ஆனால், தற்போது மூன்று நிறுவனங்களுமே ஒதுங்கிவிட்டன. காரணம், அஜித் கேட்ட சம்பளத்தைத் தர மூன்று தரப்புமே முன்வரவில்லை.
அஜித்தும் ஊதியத்தைக் குறைத்துக்கொள்ளத் தயாராக இல்லை.
இந்நிலையில், சொந்தப் படத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி தன் படங்களைத் தானே தயாரிப்பது என முடிவு செய்துள்ளாராம் அஜித்.
அதன் முதற்கட்ட நடவடிக்கையாகவே, கார் பந்தய வாழ்க்கை குறித்த ஆவணப்படத்தை அவர் திரைப்படம் போல் பிரம்மாண்டமாக தயாரித்து வருவதாகக் கூறப்படுகிறது.
அநேகமாக, அவரது நிறுவனம் தயாரிக்கும் சொந்தப் படத்துக்கான வேலைகள் அடுத்த மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

