நினைவாற்றலை இழந்து சினிமாவை விட்டே விலகிய நடிகை

நினைவாற்றலை இழந்து சினிமாவை விட்டே விலகிய நடிகை

1 mins read
7a1868e8-5ca9-40c0-acb0-e269b8ed9f70
நினைவாற்றலை இழந்து சினிமாவை விட்டே விலகிய பானுப்ரியா. - படம்: ஊடகம்
Google News Preferred Icon

பல மொழி படங்களில் நடித்தவர் நடிகை பானுப்ரியா. தனது அழகாலும் நடிப்பாலும் அசத்தல் நடனத்தாலும் ரசிகர்கள் மத்தியில் முன்னணி நடிகையாக கோலோச்சி வந்தவர்.

தனது 54 வயதில், சினிமாவில் இருந்து விலகியுள்ள பானுப்ரியா, தனது தாய் மற்றும் சகோதரருடன் வசித்து வருகிறார். ஒரு பேட்டியில், தனது உடல்நிலை குறித்து மனம் திறந்து பேசிய அவர், கணவர் இறந்து நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, நினைவாற்றல் இழப்பால் தான் போராடி வருவதாக பகிர்ந்து கொண்டார்.

அவர் கூறுகையில், “எனக்கு சில விஷயங்களை நினைவில் வைத்துக்கொள்ள முடியவில்லை. சில சமயங்களில் படப்பிடிப்பில் என்னுடைய வசனங்களைக்கூட மறந்து விடுகிறேன். அதனால் படங்களில் நடிப்பதில் இருந்து விலகி இருக்கிறேன். இரண்டு ஆண்டுகளாக இந்தப் பிரச்சினையால் அவதிப்பட்டு வருகிறேன்,” என்று அவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திசினிமாநடிகை