முதல்வர் விஜய்யைச் சந்தித்த நடிகர் சங்க நிர்வாகிகள்

முதல்வர் விஜய்யைச் சந்தித்த நடிகர் சங்க நிர்வாகிகள்

1 mins read
0ba37e00-2627-4cfe-b214-44f095bb1129
தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள், நடிகர் சங்கக் கட்டடம் தொடர்பில் முதல்வர் விஜெய்யிடம் (நடுவில்) சில கோரிக்கைகளை முன்வைத்ததாகத் தெரிகிறது. - படம்: தினமலர்
Google News Preferred Icon

தமிழக முதல்வராகப் பதவியேற்றுள்ள தவெக தலைவர் விஜய்யை தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளான சங்கத் தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர்கள் பூச்சி முருகன், கருணாஸ் ஆகியோர் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

அப்போது, திரைத்துறை சார்ந்த சில கோரிக்கைகள் முதல்வரிடம் முன்வைக்கப்பட்டன.

மேலும், நடிகர் சங்கத்துக்காகக் கட்டப்பட்டுவரும் புதிய கட்டடத்துக்கான பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அது தொடர்பாகவும் சில கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதாகத் தெரிகிறது.

இதனிடையே, நடிகர் சங்கத்தில் உறுப்பினராக உள்ள பல மூத்த கலைஞர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்ய வேண்டும்; திரைத்துறைக்கான அரசு விருதுகளை ஆண்டுதோறும் தாமதமின்றி வழங்கிடவேண்டும்; படப்பிடிப்புகளுக்கும் திரையரங்குகளில் புதுப்படங்களுக்குச் சிறப்புக் காட்சிகளைத் திரையிடுவதற்கும் அனுமதி வழங்கப்படவேண்டும் ஆகிய கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன.

குறிப்புச் சொற்கள்