புற்றுநோயிலிருந்து மீண்ட நடிகர் சிவராஜ்குமார்

புற்றுநோயிலிருந்து மீண்ட நடிகர் சிவராஜ்குமார்

1 mins read
8c2fef40-0e34-4a1d-b6cc-23e48d6d1dbc
கன்னட நடிகர் சிவராஜ்குமாருக்கு அறுவை சிகிச்சை மூலம் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பித்தப்பை அகற்றப்பட்டது. - படம்: சமூக ஊடகம்
Google News Preferred Icon

கன்னடத் திரையுலகின் மிக முக்கியமான நடிகர் சிவராஜ்குமார்.

62 வயதான சிவராஜ்குமாருக்கு புற்றுநோய் ஏற்பட்டுள்ளதாக அண்மையில் தகவல் வெளியானது. இதனைத்தொடர்ந்து சிவராஜ்குமார் சிகிச்சை மேற்கொள்ள அமெரிக்காவிற்குச் சென்றார்.

அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பித்தப்பை அகற்றப்பட்டது.

புளோரிடாவின் மியாமி கேன்சர் இன்ஸ்டிடியூட்டில் (எம்சிஐ) அறுவை சிகிச்சை செய்துகொண்ட பிறகு தாம் புற்றுநோயில் இருந்து விடுபட்டுள்ளதாக ‘இன்ஸ்டகிராம்’ பக்கத்தில் உருக்கமான காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார் சிவராஜ்குமார்.

“நான் முன்பு கூட பயந்தேன். ஆனால் ரசிகர்கள், உறவினர்கள், சக கலைஞர்கள் மற்றும் மருத்துவர்கள் குறிப்பாக எனக்கு சிகிச்சை அளித்த டாக்டர் ஷஷிதர் என்னை வலிமையாக்கினார்,” என்று சிவராஜ்குமார் காணொளியில் கூறியுள்ளார்.

மேலும் சிகிச்சையின்போது துணையாக நின்ற தனது மனைவி கீதா உள்ளிட்டோருக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

“எனது உறவினர்களும், மனைவி கீதாவும் என்னை மிகவும் நல்லபடியாகக் கவனித்துக் கொண்டார்கள். மியாமி புற்றுநோய் மையத்தின் மருத்துவர்கள் மற்றும் அனைத்து ஊழியர்களும் மிகவும் உறுதுணையாக இருந்தனர்,” என்று அவர் கூறினார்.

இதுவரை 125க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் சிவராஜ்குமார். இவர் தமிழில் ‘ஜெயிலர்’, ‘கேப்டன் மில்லர்’ படங்கள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

அவர் 1974ல் வெளியான ‘ஸ்ரீனிவாச கல்யாண’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

குறிப்புச் சொற்கள்
சினிமாகன்னடம்புற்றுநோய்

தொடர்புடைய செய்திகள்