நடிகர் மனோபாலா காலமானார்

1 mins read
0ed5d3b0-5a60-400d-b905-01e6896c615f
படம்: டுவிட்டர் -

இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடம்பிடித்த மனோபாலா புதன்கிழமை (மே 3) காலமானார்.

அவருக்கு 69 வயது.

கடந்த ஜனவரி மாதம் அவர் இதய பிரச்சினைக்காகச் சிகிச்சை மேற்கொண்டார், தற்போது கல்லீரல் பிரச்சினைகள் தொடர்பாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உடல்நலக் குறைவால் காலமானார்.

தமிழில் கிட்டத்தட்ட 700 படங்களுக்கு மேலாக குணச்சித்திர வேடங்களில் மனோபாலா நடித்துள்ளார்.

திரைத்துறையில் இயக்குநர் பாரதி ராஜாவிடம் உதவி இயக்குநராக இருந்து, 1982ல் ஆகாய கங்கை என்ற படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார் மனோபாலா.

பிள்ளை நிலா, ரஜினி காந்த் நடித்த ஊர்க்காவலன் என 20க்கும் மேற்பட்ட படங்களை அவர் இயக்கியுள்ளார்.

முன்னணி நடிகர்களான ரஜினி, சூர்யா, தனு‌ஷ், கார்த்தி, வி‌‌‌ஷால், சந்தானம் போன்றோருடன் இணைந்து நகைச்சுவை பாத்திரங்களில் நடித்துள்ளார் மனோபாலா.

அவரின் மறைவால் திரைத்துறையினர் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்
சினிமாதிரைச்செய்தி

தொடர்புடைய செய்திகள்