சூர்யா படத்தில் 15 நிமிட ‘சிங்கிள் ஷாட்’ காட்சி

சூர்யா படத்தில் 15 நிமிட ‘சிங்கிள் ஷாட்’ காட்சி

1 mins read
ed0d83cf-f81a-4069-9aaa-c5098ce74404
‘ரெட்ரோ’ படத்தின் ‘கனிமா’ என்ற பாடல் இணையத்தில் பலரை ஈர்த்துள்ளது. - படம்: சமூக ஊடகம்
Google News Preferred Icon

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா, ஜோஜு ஜார்ஜ், பூஜா ஹெக்டே, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ரெட்ரோ’. 

இதற்கு இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் பணிபுரிந்து வருகிறார்.

‘ரெட்ரோ’ படத்தின் ‘கனிமா’ என்ற பாடல் இணையத்தில் பலரை ஈர்த்துள்ளது. இதில் பூஜா ஹெக்டேவின் நடனம் இணையவாசிகள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. 

இப்பாடலை ஒட்டி 15 நிமிடக் காட்சி ஒன்றை ஒரே ‘டேக்’கில் காட்சிப்படுத்தி இருக்கிறது படக்குழு.

‘கனிமா’ பாடலைத் தொடர்ந்து சண்டைக் காட்சி, அதனைத் தொடர்ந்து ஒரு காட்சி என 15 நிமிடத்துக்கு ஒரே ‘டேக்’கில் எடுத்திருக்கிறார்கள்.

இக்காட்சிக்கு அனைத்து நடிகர்களும் பங்கெடுத்து ஒத்திகைப் பார்த்து, அதைச் சாத்தியப்படுத்தி இருக்கிறார்கள்.

ஒவ்வொரு திங்கட்கிழமையும் படப்பிடிப்பில் நடைபெற்ற சுவாரசியமான சம்பவங்களை வெளியிட்டு வருகிறது படக்குழு. 

2டி நிறுவனம் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள ‘ரெட்ரோ’ படம் மே 1ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

நடிகர் விக்ரம் நடித்துள்ள ‘வீர தீர சூரன்’ படத்திலும் 16 நிமிடக் காட்சி ஒன்றை ஒரே டேக்கில் காட்சிப்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்