பக்திப் பாடலாக மாற்றம் பெற்ற 'நிலா அது வானத்து மேலே'

பக்திப் பாடலாக மாற்றம் பெற்ற 'நிலா அது வானத்து மேலே'

1 mins read
Google News Preferred Icon

மணிரத்னம்-கமல்ஹாசன்-இளையராஜா கூட்டணியில் உருவாகி, 1987ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற படம் 'நாயகன்'.

கேட்போரின் மனத்தைக் கொள்ளைகொள்ளும் வகையில் அமைந்த அப்படத்தின் இனிமையான பாடல்கள் அனைத்தும் பெரும் 'ஹிட்'டாகி, பட்டிதொட்டியெங்கும் ஒலித்தன.

இந்நிலையில், அப்படத்தில் இடம்பெற்ற 'நிலா அது வானத்து மேலே' பாடல், வங்காள மொழியில் பக்திப் பாடலாக உருமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் நவராத்திரி திருநாளை வங்காளிகள் துர்கா பூசையாக கொண்டாடி வருகின்றனர்.

இவ்வாண்டு அதையொட்டி, 'நிலா அது வானத்து மேலே' பாடலின் மெட்டில் துர்க்கையம்மனின் பாடலாக மாற்றியமைத்துள்ளார் வங்காள நடிகர் கரஜ் முகர்ஜி.

Watch on YouTube

புகழ்பெற்ற பாடகர் உஷா உதுப், அவருடன் இணைந்து அப்பாடலைப் பாடியுள்ளார். அப்பாடல் இணையத்தில் பரவலாகி வருகிறது.