சிவாஜி, ரஜினி, கமல் குறித்து மனம்திறந்த நடிகை ராதா

சிவாஜி, ரஜினி, கமல் குறித்து மனம்திறந்த நடிகை ராதா

1 mins read
Google News Preferred Icon

நான் ஒரு முன்னாள் முன்னணி நடிகை என்பதை விடவும் நாட்டி லேயே முதல் தர சினிமா ரசிகை என என்னைக் கூறிக் கொள்ள லாம் என்று கூறியுள்ளார் நடிகை ராதா.

"அந்த அளவுக்கு சினிமா மீது எனக்கு ஆசை இருந்தது. நான் எந்த மனநிலையில் இருந்தாலும் சினிமாதான் எனக்கு மருந்து; விருந்து எல்லாம்," என்கிறார்.

கடந்த 1980, 90களில் தமிழ்த் திரையுலக ரசிகர்களின் கனவுக் கன்னியாக இருந்தவர் ராதா.

சிவாஜி, ரஜினி, கமல், விஜய காந்த், சத்யராஜ், பிரபு உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்து பல வெற்றிப் படங்களையும் கொடுத்தவர்.

அவர் தமிழ்த் திரைச்ெசய்தி ஊடகங்களுக்கு அளித்துள்ள நேர்காணலில், "சினிமா, குடும்ப வாழ்க்கை இரண்டுமே மகிழ்ச்சி கரமாக அமைந்தாலும் எனக்கு மிக வும் பிடித்தது சினிமா வாழ்க்கை தான்.

"இப்போதும் 80-90களில் நடித்த நாங்கள் அனைவரும் தொடர்ந்து நட்பிலேயே இருக்கிறோம்; சந்தித்துக்கொள்கிறோம். சிவாஜி சாருடன் நடித்த முதல் மரியாதை படம் மறக்கவே முடியாது. என் சினிமா வாழ்க்கையில் முதல் மரியாதைக்குரிய படம் அது. கமல் சாருக்கு மலையாளம் தெரியும் என்பதால் வசனத்தை விடவும் கொஞ்சம் கூடுதலாக அவருடன் பேசலாம். ரஜினியை ரசிகையாக பார்த்தபோது, அவரது 'ஸ்டைல்' என்னை வியக்க வைத்தது. ரொம்ப எளிமையான மனிதர். இந்த உல கத்திலேயே பிரமாதமானது என்றால் ரசிகர்களின் அன்பைத்தான் சொல் வேன்," என்கிறார் ராதா.