‘ஸ்பிளாஷ் வொண்டர் வாட்டர் பார்க்’

‘ஸ்பிளாஷ் வொண்டர் வாட்டர் பார்க்’

1 mins read
938876b2-68c9-4e46-9c6b-3c8f4fe60307
செந்தோசாவில் உள்ள ‘ஸ்பிளாஷ் வொண்டர் வாட்டர் பார்க்’ - படம்: லிட்டில் டே அவுட்.
Google News Preferred Icon

செந்தோசாவில் உங்களுக்காகவே புதிதாக வந்துள்ளது ‘ஸ்பிளாஷ் வொண்டர் வாட்டர் பார்க்’ (Splash Wonder Water Park).

இங்கே நீங்கள் குதித்து விளையாட வண்ணமயமான பவுன்சி வீடுகள், வளவளப்பான சறுக்கு மரங்கள், தண்ணீர் குளங்கள் என நிறைய சாகச விளையாட்டுகள் உங்களுக்காகக் காத்திருக்கின்றன.

அதுமட்டுமல்லாமல் உங்களுக்கு மிகவும் பிடித்த ‘பிங்க்ஃபாங்’ (Pinkfong), ‘பேபி ஷார்க்’ (Baby Shark) ஆகியோரை இங்கே நீங்கள் நேரில் பார்க்கலாம்! அவர்களுடன் சேர்ந்து விளையாடலாம்.

நீங்கள் தண்ணீரில் வேகமாகச் சறுக்கி விளையாட ஆசைப்பட்டாலோ அல்லது தண்ணீரில் விளையாட நினைத்தாலோ இங்கே உங்களுக்குப் பிடித்த அனைத்தும் இருக்கின்றன.

உள்ளே நுழைந்தவுடனேயே ஒரு பெரிய ராட்சத ஆக்டோபஸ் உங்களை வரவேற்கும்! அதுதான் ‘க்ராக்கன்ஸ் கோவ்’ (Kraken’s Cove) தண்ணீர் குளம்.

அந்த ஆக்டோபஸ் மலை மேல் ஏறி, அதனுடைய நீளமான ஆரஞ்சு நிறக் கைகளைப் பிடித்து விளையாடலாம்.

பிறகு, அங்கிருக்கும் நான்கு பெரிய சறுக்கு மரங்கள் வழியாக ‘சர்ர்ர்’ என்று தண்ணியில் சறுக்கிக்கொண்டே கீழே வரலாம்!

உங்களின் வார இறுதி நாள்களில் செந்தோசா சென்று மறக்க முடியாத அனுபவத்தைப் பெறுங்கள்!

குறிப்புச் சொற்கள்