விழிப்பூட்டி வழிகாட்டும் சமூக இதழ்

விழிப்பூட்டி வழிகாட்டும் சமூக இதழ்

1 mins read
79a93f98-5460-4736-ac6f-47ddd1c1678b
தமிழவேள் கோ. சாரங்கபாணி - படம்: செயற்கை நுண்ணறிவு
Google News Preferred Icon

தமிழ் முரசுக்கு இன்று வயது 91.

தமிழ் முரசு 6.7.1935 அன்று பிறந்தது. தமிழ் முரசைத் தொடங்கியவர் கோ.சாரங்கபாணி. அவரைத் தமிழவேள் என்று பெருமையாக அழைப்பார்கள். அவர் சிங்கப்பூர் தமிழ் மக்களின் பெருந்தலைவர். இந்த நாட்டில் பல அரும்பணிகளைச் செய்தவர்.

அச்சகத்தில் ஊழியர்களுடன் கோ.சா
அச்சகத்தில் ஊழியர்களுடன் கோ.சா - படம்: செயற்கை நுண்ணறிவு

அப்போது சிங்கப்பூரில் தொலைக்காட்சி வரவில்லை, கைப்பேசி, இணையம், சமூக ஊடகம் எல்லாம் கண்டுபிடிக்கப்படவில்லை. பத்திரிகையே மக்களுக்குச் செய்திகளைச் சொன்னது.

துடிப்புமிக்கச் சமூகத் தலைவர் கோ.சா.
துடிப்புமிக்கச் சமூகத் தலைவர் கோ.சா. - படம்: செயற்கை நுண்ணறிவு
அன்றைய  அலுவலகத்தில் ஒரு நாள்
அன்றைய அலுவலகத்தில் ஒரு நாள் - படம்: செயற்கை நுண்ணறிவு

மக்கள் செய்தி படிக்கவும், கதை, கவிதை, கட்டுரைகள் படிக்கவும் பத்திரிகை உதவியது. பத்திரிகை படிப்பது ஒருகாலத்தில் மக்களின் முக்கிய பொழுதுபோக்காக இருந்தது.

தமிழர்கள், குறிப்பாக இளையர்கள் தங்கள் திறன்களை வெளிப்படுத்துவதற்கான தளத்தை அமைக்க எண்ணி திரு சாரங்கபாணி, தமிழர் திருநாளை நிறுவினார்.

-

தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வருகிறது. தமிழ் முரசும் வேகமாக வளர்ந்து வருகிறது.

இன்று தமிழ் முரசை நீங்கள் இணையத்தில் படிக்கலாம். கைப்பேசியில் பார்க்கலாம்

குறிப்புச் சொற்கள்