வெடிப்பின் காரணமாகப் படுகாயம் அடைந்தவரின் நெற்றியில் 5 சென்டிமீட்டர் நீளத்தில் சிராய்ப்பு ஏற்பட்டதாக அவர் தெரிவித்தார். எஞ்சிய 21 பேருக்கு இலேசான தீக்காயங்களும் வெட்டுக் காயங்களும் ஏற்பட்டன. குறிப்பாக, அவர்களது கைகளில் பாதிப்பு ஏற்பட்டதாகத் திரு ஸுல்கிஃப்லி தெரிவித்தார்.

மலேசியாவில் பட்டாசு விபத்து; பலர் காயம், இருவர் கைது

World6 months ago

அலோர் ஸ்டார்: தீபாவளியன்று அதிகாலையில், மலேசியாவின் கெடா மாநிலத்தில் உள்ள கூலிம் நகரில் பட்டாசுகள் வெடித்ததில் ஆடவர் ஒருவர் படுகாயம் அடைந்தார்.

மேலும் 21 பேர் காயமடைந்தனர். அவர்களில் பங்ளாதேஷியர் ஒருவரும் அடங்குவார்.

திங்கட்கிழமை (அக்டோபர் 20) அதிகாலை 12.45 மணி அளவில் வெடிப்பு நிகழ்ந்ததாகக் கூலிம் காவல்துறைத் தலைவர் ஸுல்கிஃப்லி அசிசான் கூறினார்

வெடிப்பின்...

ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடிகள் இருப்பதாக ஈரான் எச்சரித்தது.

ஹோர்முஸ் நீரிணையில் மாற்றுவழி: ஈரான் அறிவுறை

World10 minutes ago

டெஹ்ரான்: ஹோர்முஸ் நீரிணை வழியாகப் பயணம் செய்யும் கப்பல்களுக்கு மாற்றுவழிகள ஈரான் வியாழக்கிழமை (ஏப்ரல் 9) அறிவித்துள்ளது.

கப்பல் போக்குவரத்துக்கு முக்கிய பாதையான ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடிகள் இருப்பது குறித்து ஈரான் எச்சரித்தது.

இரண்டு வார போர் நிறுத்த உடன்பாட்டின் ஓர் அம்சமாக ஈரான் ஹோர்முஸ் நீரிணையைத் தற்காலிகமாகத் திறந்துவிட ஒப்புக்கொண்டுள்ளது.

இந்நிலையில், நீரிணை வழியாகச்...

ஒட்டுமொத்த கட்டுமானச் செலவுகளில் 15 விழுக்காட்டிலிருந்து 25 விழுக்காடுவரை எரிபொருளுக்குச் செல்வதாகக் கட்டுமானக் குத்தகையாளர்கள் தெரிவித்தனர்.

அனைத்துக் கட்டுமானத் திட்டங்களுக்கும் உதவி வேண்டும்: சிங்கப்பூர்க் குத்தகையாளர் சங்கம்

Singapore29 minutes ago

சிங்கப்பூரின் பொதுத் துறையிலும் தனியார்த் துறையிலும் உள்ள திட்டங்களைச் செயல்படுத்தும் கட்டுமான குத்தகையாளர்களுக்கு அரசாங்கத்தின் உதவி தேவை என்று சிங்கப்பூர்க் குத்தகையாளர் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

உலக அளவில் எரிபொருள் விலைகள் அண்மை வாரங்களில் 200 விழுக்காடுக்கும்மேல் அதிகரித்துள்ளதைச் சங்கம் சுட்டியது.

முக்கியமான பொதுத் துறை திட்டங்களுக்கு மட்டுமின்றி தனியார்த் துறைத் திட்டங்களுக்கும் உதவிசெய்யும்படி அரசாங்கத்துடன் கலந்துரையாடி...

புளூம்பர் பங்களா கட்டுரை தொடர்பில் நடைபெற்ற அவதூறு வழக்கு விசாரணையில் உள்துறை அமைச்சர் கா. சண்முகம் நேரடியாக உயர்நீதிமன்றம் சென்றார்.

பங்களா கட்டுரையில் அமைச்சர் சண்முகம் குறிவைக்கப்படவில்லை: புளூம்பர் வழக்கறிஞர்

Singapore44 minutes ago

சிங்கப்பூரின் தேசியப் பாதுகாப்புக்கான ஒருங்கிணைப்பு அமைச்சர் கா. சண்முகத்தைக் குறிவைத்து பங்களா தொடர்பிலான கட்டுரை எழுத்தப்படவில்லை என்று புளூம்பர் செய்தி நிறுவனத் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.

புளூம்பர்க் வெளியிட்ட பங்களா தொடர்பிலான கட்டுரைமீது உள்துறை அமைச்சருமான திரு சண்முகமும் மனிதவள அமைச்சர் டான் சீ லெங்கும் அவதூறு வழக்குத் தொடுத்தனர்.

உயர் நீதிமன்றத்தில் புதன்கிழமை...

முரசு மேடை

சிறப்பு விருந்தினர் திரு தினேஷ் வாசு தாஸ், சிறப்புப் பேச்சாளர் மா. பிரெமிக்கா, நிகழ்ச்சியில் பங்கேற்ற இளம் படைப்பாளர்களும் ஏற்பாட்டாளர் முகமது பிலாலும் எடுத்துக்கொண்ட படம்.

தொன்மையின் தொடர்ச்சிக்கான பாலம்: ‘இன்பத் தமிழும் இளைய தலைமுறை ஈடுபாடும்’

Communityabout 14 hours ago

தமிழ்மொழியை இளையர்களிடம் கொண்டுசேர்க்க நாம் இருமொழிப் பயன்பாட்டு முறையை அணுக வேண்டும் என்ற கருத்தினைக் கொண்டுள்ளார் இளம் பேச்சாளர் டாக்டர் மா. பிரெமிக்கா.

அவரின் இந்தக் கருத்தாழமிக்க சொற்களுடன் சிங்கப்பூர் இந்திய முஸ்லிம் பேரவையும் வளர்தமிழ் இயக்கமும் இணைந்து நடத்திய ‘இன்பத் தமிழும் இளைய தலைமுறை ஈடுபாடும்’ என்ற நிகழ்ச்சி அரங்கேறியது. ஒன்பதாவது ஆண்டாகத் தொடரும்...

மனத்துக்கு நெருக்கமான பாடல்களை ரசித்துக் கேட்கும் பங்கேற்பாளர்கள்.

ரசிகர்களை இசை வெள்ளத்தில் மூழ்கடித்த ‘குவாரென்டின் ஃபிரம் ரியாலிட்டி’

Communityabout 14 hours ago

‘மெளன ராகம்’ படத்தின் இசைக்கோப்பு, ‘பூவே இளைய பூவே’ உள்ளிட்ட பல்வேறு பாடல்களுடன் களைகட்டியது ‘குவாரென்டின் ஃபிரம் ரியாலிட்டி’ இசை நிகழ்ச்சி.

ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 5) எஸ்பிளனேட்டில் உள்ள சிங்டெல் நீர்முகப்பு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏறத்தாழ 600 பேர் பங்கேற்றனர்.

இசைக்கலைஞர் சுபஸ்ரீ தணிகாசலத்தின் தலைமையில் ஏறத்தாழ 21 கலைஞர்கள் நேரடி இசைக் கச்சேரியை...

ஏப்ரல் 8, 2026 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
Play Video

வருமான உயர்வால் சமூகப் பராமரிப்புத் துறையில் 23,000 பேர் பலன்பெறக்கூடும்: சுகாதார அமைச்சு
Play Video

ஏப்ரல் 7, 2026 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
Play Video

ஜூன் மாதம் $500 சிடிசி பற்றுச்சீட்டுகள் வழங்கப்படும்
Play Video

மூத்தோரைக் குறிவைக்கும் வாட்ஸ்அப் மோசடி; காவல்துறை எச்சரிக்கை
Play Video