கழிவிலிருந்து ஆக்கம்: பழ மெத்துறையில் இருந்து ‘ஸ்ட்ராபெர்ரி’

கழிவிலிருந்து ஆக்கம்: பழ மெத்துறையில் இருந்து ‘ஸ்ட்ராபெர்ரி’

1 mins read
e74f4607-8c65-4a00-ae95-7028fb749f53
பழ மெத்துறையைப் பயன்படுத்தி அழகிய ‘ஸ்ட்ராபெரி’ பழம் செய்வது குறித்து அறிந்துகொள்ளலாம். - படங்கள்: kidsartncraft.com
Google News Preferred Icon

கி.விஜயலட்சுமி

பிள்ளைகளே! நாம் கழிவு என நினைத்துக் குப்பையில் தூக்கி எறியும் பொருள்களிலிருந்துகூட அழகிய கைவினைப் பொருள்களை செய்யலாம்.

இவ்வாரம், பழ மெத்துறையைப் பயன்படுத்தி அழகிய ‘ஸ்ட்ராபெர்ரி’ பழ பொம்மை செய்வது குறித்து அறிந்துகொள்ளலாம்.

தேவையானப் பொருள்கள்:

1. சிகப்பு நிறப் பழ மெத்துறைகள் 2. பச்சை வண்ணக் காகிதம் 3. காகிதம் வெட்டும் கத்தரிக்கோல் 4. பசை (glue) 5. நூல் அல்லது ‘ரப்பர் பேண்ட்’

செய்முறை

பழமெத்துறையைப் பாதியாக வெட்டவும்.
பழமெத்துறையைப் பாதியாக வெட்டவும். - படங்கள்: kidsartncraft.com

முதலில், பழ மெத்துறையைப் பாதியாக வெட்டிக்கொள்ளவும். அதன் ஒரு பாதியைப் படம் இரண்டில் காட்டியிருப்பதைப் போன்று முக்கோண வடிவில் (triangle shape) வெட்டவும்.

செவ்வக வடிவமாக்க வேண்டும்.
செவ்வக வடிவமாக்க வேண்டும். - படங்கள்: kidsartncraft.com

வெட்டப்பட்ட வடிவங்களின் முனையை ஒன்றிணைத்து நூல் அல்லது ‘ரப்பர் பேண்ட்’ (Rubber Band) போட்டுக் கட்டவும்.

நூலைக் கொண்டு கட்ட வேண்டும்.
நூலைக் கொண்டு கட்ட வேண்டும். - படங்கள்: kidsartncraft.com

பழ மெத்துறையை உட்புறமாகத் திருப்பி, உருண்டைபோல் ஆக்கவும்.

அதை உட்புறமாகத் திருப்பவேண்டும்.
அதை உட்புறமாகத் திருப்பவேண்டும். - படங்கள்: kidsartncraft.com

திறந்திருக்கும் மற்றொரு பகுதியைப் பசையால் (glue) ஒட்டவும்.

உருண்டை வடிவத்திற்குக் கொண்டுவர வேண்டும்.
உருண்டை வடிவத்திற்குக் கொண்டுவர வேண்டும். - படங்கள்: kidsartncraft.com

பச்சை வண்ணக் காகித்தை இலை வடிவத்தில் வெட்டி, வட்டமாக இருக்கும் பகுதியின்மீது ஒட்டவும். அதே காகிதத்தில் மெல்லிய குச்சிபோல் செய்து இலையின்மீது ஒட்டவும்.

இலை வடிவத்தை ஒட்டினால் ‘ஸ்ட்ராபெரி’ தயார்.
இலை வடிவத்தை ஒட்டினால் ‘ஸ்ட்ராபெரி’ தயார். - படங்கள்: kidsartncraft.com

இதோ, ‘ஸ்ட்ராபெர்ரி’ கைவினைப்பொருள் தயார்!!

குறிப்பு: கத்தரியைப் பயன்படுத்தும்போது பெரியோரின் உதவியை நாடுவது அவசியம்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்