மூக்கண்டியுடன் லங்காவி பயணம்

மூக்கண்டியுடன் லங்காவி பயணம்

1 mins read
6bfea755-6486-4663-b1f1-73abcceb71e3
மூக்கண்டியுடன் உறங்கும் ஸ்ரீ வினய் ராகவேந்திரன் - படம்: ராகவேந்திரன்
Google News Preferred Icon

என் 10வது பிறந்தநாளைக் கொண்டாட என் அன்பான மூக்கண்டியுடன் லங்காவிக்குச் சென்றேன்.

மூக்கண்டி என்னுடைய மிகச் சிறந்த நண்பன். அவன் நீல நிறத்தில் அழகாக இருப்பான். அவனது மூக்கு நீளமாக இருக்கும். அவனிடம் எல்லா ரகசியங்களையும் சொல்லி விட்டுத்தான் தூங்குவேன். அவன் இல்லாமல் நான் எங்கும் செல்ல மாட்டேன்.

நாங்கள் விமானத்தில் லங்காவிக்கு சென்றோம். ஜன்னல் வழியாக மேகங்களைப் பார்த்தோம். மூக்கண்டியும் என்னுடன் அமைதியாக இருந்தான். நான் அவனை கட்டிப்பிடித்து தூங்கினேன்.

லங்காவி மிகவும் அழகான இடம். கடல் நீர் நீலமாகவும் தெளிவாகவும் இருந்தது. நானும் மூக்கண்டியும் கடற்கரையில் நடந்தோம். அங்கே காற்று மெதுவாக வீசியது. அது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

அன்று என் 10வது பிறந்தநாளைக் கொண்டாடினோம். கேக் வெட்டினேன். மூக்கண்டி என்னுடன் இருந்தான். நான் அவனிடம் என் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டேன்.

அந்த நாள் என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள். மூக்கண்டி என்னுடன் இருந்ததால் அது இன்னும் சிறப்பானது.

இப்போது கூட அந்த நினைவுகளை நினைத்தால் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

ஸ்ரீ வினய் ராகவேந்திரன்

தொடக்கநிலை 5, இயூ டீ தொடக்கப் பள்ளி

குறிப்புச் சொற்கள்