விளையாட்டுகளால் விறுவிறுப்பான விலங்கியல் தோட்டம்

விளையாட்டுகளால் விறுவிறுப்பான விலங்கியல் தோட்டம்

2 mins read
167024a6-b1d6-447b-a0f4-c4f4b41193e5
தொடுதிரைகளில் ‘மைன்கிராஃப்ட்’  விளையாட்டு. - படம்: மண்டாய் வனவிலங்குக் காப்பகம்
Google News Preferred Icon

நிஜ உலகில் எப்படி ‘லெகோ’ (Lego) அமைக்கப்படுகிறதோ, அதேபோல ‘மைன்கிராஃப்ட்’ (Minecraft) என்னும் கணினி விளையாட்டில் மண், கல், மரம் ஆகியவற்றைக் கொண்டு கட்டடங்களைக் கட்டலாம்.

விளையாட்டிலேயே பல்வேறு நிலப்பரப்புகளைச் சுற்றிப் பார்ப்பது, உணவு சேகரிப்பது, வீடுகளைக் கட்டுவது ஆகியவற்றைச் செய்து பார்க்கலாம்.

இந்த விளையாட்டை நீங்கள் இப்போது இரவு நேர விலங்கியல் தோட்டத்தில் (Night Safari) விளையாடலாம்.

அமெரிக்கா, பிரிட்டன், கனடா ஆகிய நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த விளையாட்டு இப்போது சிங்கப்பூரில் இயங்குகிறது.

பிள்ளைகளைச் சுற்றி, கணினி உலக மரங்கள்
பிள்ளைகளைச் சுற்றி, கணினி உலக மரங்கள் - படம்: மண்டாய் வனவிலங்குக் காப்பகம்

‘ஸோம்பி’ (Zombie) எனப்படும் தீய சக்திகளால் தாக்கப்படும் ஊரைக் காப்பாற்றும் விளையாட்டாக, எல்லா வயதினரும் இதில் பங்கேற்கலாம்.

காட்டில் வாழும் விலங்குகளைப் பற்றித் தெரிந்துகொள்வதுடன், பிள்ளைகள் உல்லாசமாகக் குடும்பத்தாருடன் விளையாடலாம்.

வரும் ஒவ்வொரு பிள்ளைக்கும் பொம்மையும், மேலே போர்த்தப்படும் மேலங்கி ஒன்றும் வழங்கப்படும்.

அத்துடன், பூமியின் ரகசியப் பகுதிகளைப் பற்றி விளக்கும் ‘எக்ஸ்பிளோரியா’ (Exploria) கண்காட்சியும் இடம்பெறுகிறது.

தரையிலும் சுவர்களிலும் கண்ணைக் கவரும் ஒளி வண்ணங்கள் நிறைந்துள்ளன.
தரையிலும் சுவர்களிலும் கண்ணைக் கவரும் ஒளி வண்ணங்கள் நிறைந்துள்ளன. - படம்: மண்டாய் வனவிலங்குக் காப்பகம்

எளிதில் பார்க்க முடியாத பாலைவனக் காட்சிகள், மிகுந்த குளிருள்ள பகுதிகள், பறவைகள் பறக்கும் உயரமான வானப் பகுதிகள் ஆகியவற்றை மிக அருகில் பார்வையாளர்கள் காணலாம்.

மழைக்காடுகள், பவளப்பாறைகள், சூரியக் கதிர்கள் செல்ல முடியாத ஆழமான பகுதிகள் என உலகின் மிக அரிதான காட்சிகளைக் காணலாம். அவற்றின் அழகில் நீங்கள் திளைக்கலாம்.

ஒளி நிறைந்த கனசதுரத்தைக் (cube) கையில் ஏந்தும் சிறுவன்.
ஒளி நிறைந்த கனசதுரத்தைக் (cube) கையில் ஏந்தும் சிறுவன். - படம்: மண்டாய் வனவிலங்குக் காப்பகம்
-

வண்ணங்கள் நிறைந்த விளக்குக் கண்காட்சி, காண்போரின் கண்களுக்கு விருந்தளிக்க உள்ளது.

இந்தப் புதிய அங்கங்களுடன் உணவுக் கடைகளும் இப்போது கூடுதலாக உள்ளதாக மண்டாய் வைல்ட்லைஃப் குழுமத்தின் உள்ளூர்ச் சுற்றுலாத் துறைத் துணைத் தலைவர் திருவாட்டி மிஷேல் சூ தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்