இளமைக் காலம்
லீ சிங்கப்பூரில் 1923ல் பிறந்தார்.
லீ முதன் முதலில் தெலுக் குரோவ் முதன்மைப் பள்ளியில் பயின்றார். பின்னர், அவர் ராஃபிள்ஸ் நிறுவனத்தில்(RI) பயின்றார்.
லீ குவான் யூ வழக்கறிஞர் படிப்பை முடித்தவர்.
அரசியல் பயணம்
லீ குவான் யூ, சிங்கப்பூர் குடியரசின் முதல் பிரதமர் (1959 - 1990) ஆவார்.
இவரை நவீன சிங்கப்பூரின் தந்தை எனச் சொல்கிறார்கள்.
சிங்கப்பூரின் மூன்றாவது பிரதமரான லீ சியன் லூங், இவரின் மகன் ஆவார்.
தொடர்புடைய செய்திகள்
விருதுகள்
தி ஆர்டர் ஆப் தி ரைசிங் சன் (1967)
ஆர்டர் ஆப் கம்பேனியன்ஸ் ஆப் ஹானர் (1970)
தி ஆர்டர் ஆப் கிரேட் லீடர் (1988)
நல்ல பண்புகள்
தன் அயராத உழைப்பினால், பலவற்றைச் சாதித்து, உலக அளவில் மிகவும் பிரபலமான மனிதரானதோடு, மிகச்சிறந்த பல தன்னம்பிக்கையூட்டும் அறிவுரைகளையும் வழங்கியுள்ளார்.
உங்கள் குறிக்கோள்களையும் கனவுகளையும் நீங்கள் அடைய விரும்பினால், அதை நீங்கள் சுயகட்டுப்பாடு இல்லாமல் அடைய முடியாது.
வாழ்க்கை என்பது சாப்பிடுவது, குடிப்பது, தொலைக்காட்சி மற்றும் சினிமா மட்டுமல்ல.
மனித மனம் ஆக்கபூர்வமாகச் சிந்திக்க இருக்க வேண்டும். அது தன்னை மகிழ்விக்க மின்சாதனங்களை மட்டுமே சார்ந்து இருக்கக்கூடாது.
வளர்ச்சிக்கு அடிப்படை ஒழுக்கம். மேலும் தண்டனைகள் கடுமையாக இருந்தால் குற்றங்கள் குறைந்துபோகும் என்பது அவரது மனத்தில் ஆழப் பதிந்துபோனது.
சிங்கப்பூரில் தமிழ், சீனம், மலாய் ஆங்கில மொழிகளை அதிகாரபூர்வ மொழிகளாக்கி, ஆங்கிலத்தை அலுவல் மொழியாக்கி இருமொழிக் கொள்கையைத் தோற்றுவித்தார்.
சிங்கப்பூரின் வெற்றிக்கு முக்கியக் காரணம் அதன் பல்வேறு கலாசாரங்களின் ஒற்றுமையே ஆகும்.
மக்கள் நலனில் அக்கறைகொண்ட ஒரு தலைவரிடம் முழுமையான அதிகாரம் கிடைத்தால் ஒரு நாட்டை எப்படி முன்னேற்றமுடியும் என்பதற்கு நவீன சிங்கப்பூர் சிற்பியான திரு. லீ குவான் யூ ஒரு தலைசிறந்த உதாரணம்.
மாமனிதராக மட்டுமல்லாமல், சிங்கப்பூருக்கே வழிகாட்டும் தலைவராக விளங்கிய திரு. லீ குவான் யூ
23 மார்ச் 2015 அன்று, நிமோனியாவால், 91 வயதில் மறைந்தார்.
திரு. லீ குவான் யூவின் வாழ்க்கை மற்றும் தலைமைத்துவத்திலிருந்து கற்றுக்கொள்ளக்கூடிய பாடங்கள் மாணவர்களான நாம் பொறுப்பான, சிந்திக்கத் தெரிந்த மற்றும் திறமையான மனிதர்களாக வளர உதவும்.

