சிங்கப்பூர் 9 ஆகஸ்ட் 1965 அன்று மலேசியாவில் இருந்து பிரிந்தது. அன்றைய தினம் நம் நாட்டிற்கு சுதந்திரம் முழுமையாகக் கிடைத்தது.
அதனைத்தொடர்ந்து முதல் தேசிய தின அணிவகுப்பு (NDP) ஆகஸ்ட் 9, 1966 அன்று நடந்தது.
1965ல் மலேசியாவிலிருந்து பிரிந்து சிங்கப்பூர் சுதந்திரமடைந்த முதல் ஆண்டை நினைவுகூரும் வகையில் நடைபெற்ற விழா அது.
சிங்கப்பூரின் முதல் பிரதமரும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவருமான மறைந்த திரு லீ குவான் யூ சிங்கப்பூரை அதிவேக வளர்ச்சியடையச் செய்தவர் மட்டுமல்லர், சிங்கப்பூரில் இந்தியர்களுக்குப் பக்கபலமாகவும் இருந்தவரும்கூட.
சிங்கப்பூரின் அதிகாரத்துவ, அரசியல் மொழிகளில் ஒன்றாகத் தமிழ்மொழி விளங்குகிறது. தமிழுக்கு இத்தகைய அங்கீகாரம் கிடைத்துள்ள ஓரிரு உலக நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று.
தமிழுக்கும் சிங்கப்பூருக்கும் இந்தப் பெருமை வந்துசேர அடித்தளம் அமைத்தவர் சிங்கப்பூரின் முதல் பிரதமர் திரு லீ குவான் யூ. சிங்கப்பூரில் வாழும் தமிழ்ச் சமூகத்துக்கு அவர் அரணாகத் திகழ்ந்தார். இவர் 5 ஜூன் 1959 முதல் 28 நவம்பர் 1990 வரை பிரதமராக இருந்தார். (31 ஆண்டுகள், 176 நாள்கள்)
அவருக்குப் பிறகு இரண்டாவது பிரதமராக திரு கோ சோக் டோங் 28 நவம்பர் 1990 அன்று பிரதமராகப் பதவியேற்றார்.
“திரு லீ குவான் யூவுக்குப் பிறகும் சிங்கப்பூர் செழித்தோங்கும். இதை நான் உறுதிசெய்வேன்,” என்று கூறி, அதை நிரூபிக்கும் வகையில் பொறுப்பாற்றிய
தொடர்புடைய செய்திகள்
திரு கோ, 12 ஆகஸ்ட் 2004 வரை பிரதமராகச்
சேவையாற்றினார்.
அவரைத் தொடர்ந்து மூன்றாவது பிரதமராக திரு லீ சியன் லூங் 12 ஆகஸ்ட் 2004 அன்று பொறுப்பேற்றார்.
உலகின் முதல் தர நாடுகளில் ஒன்றாகச் சிங்கப்பூரை மேம்படுத்தி, பொன்விழா கொண்டாட வைத்தார். இவர் 15 மே 2024 வரை பிரதமராகப் பொறுப்பில் இருந்தார்.
அவருக்குப் பிறகு 15 மே 2024 அன்று நான்காவது பிரதமராகப் பொறுப்பேற்றுள்ளார் திரு லாரன்ஸ் வோங்.
நமது புதிய பிரதமராகிய லாரன்ஸ் வோங்கின் தலைமைத்துவமும் கல்வி மற்றும் தேசிய வளர்ச்சிக்கான பங்களிப்பும் நம் நாட்டின் வளர்ச்சிக்கு உதவுகின்றன.
சிங்கப்பூர் அரசியல் சூழல் நிலையாகவும் அமைதியாகவும் இருப்பதற்கு நம் நாட்டின் பிரதமர்களே முக்கியக் காரணம் என்பதை இங்கு நான் வலியுறுத்திக் கூற விரும்புகிறேன்.
இத்தகைய பெருமை வாய்ந்த இந்த சிங்கப்பூரில் நாம் இருப்பதே நமக்குப் பெருமை. சிங்கப்பூரின் பிறந்தநாளைச் சிறப்பாகக் கொண்டாடி மகிழ்வோம்.
அன்பழகன் தனூஸ்ரீ
தொடக்கநிலை 6
ஹவ்காங் தொடக்கப்பள்ளி

