சிறுவர்களுக்கு பயனுள்ள சில ‘கேட்ஜெட்டுகள்’

1 mins read
தொழில்நுட்ப வளர்ச்சியினால் கூடுதல் திரை நேரத்துக்கு சிறுவர்கள் ஆளாகின்றனர் என்று தொடர்ந்து சொல்லப்படுகிறது. எனினும், தொழில்நுட்ப வளர்ச்சியின் பலனாக பிள்ளைகளின் படைப்பாற்றல் திறனை வளர்க்கும் விதமாகவும் பல ‘கேட்ஜெட்டுகள்’ சந்தையில் கிடைக்கின்றன.
fd18f30b-0eed-4163-865b-eda097442332
உலக உருண்டை. - படம்: ஊடகம்

‘ஆர்பூட் எர்த் குளோப்’:

சிறுவர்கள் உலக வரைபடம் குறித்தும், உலகின் ஒவ்வொரு பகுதியின் சிறப்பம்சங்கள், உலக அதிசயங்கள் என பல கூறுகளைத் தெரிந்து கொள்ள சிறந்த வழி இந்த குளோப்.

‘ஆக்மெண்டட் ரியாலிட்டி’ எனப்படும் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ‘குளோபை’, திறன்பேசி அல்லது டேப்லட்டில் இணைத்துக் கொள்ளலாம்.

குறிப்பிட்ட பகுதியை திறன் பேசியில் வருடினால், அங்குள்ள சிறப்பம்சங்கள், ஏறத்தாழ உயிர்பெற்றெழுவது போன்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

விலங்குகள், பறவைகள், உணவு வகைகள், கட்டடக் கலைகள் என அனைத்தையும் முப்பரிமாணத்தில், அசைவுகளுடன் கண்டு களிக்கலாம்.

இது ஒரு பொழுது போக்குடன் கூடிய கல்வி பெரும் வழி. திரையில் பயனற்றவைகளை பார்ப்பதை குறைத்து, பயனுள்ளவற்றை பார்க்க இது நல்ல தேர்வு.

குறிப்புச் சொற்கள்