மீண்டும் ‘கிட்ஸ்ஃபெஸ்ட்’ கொண்டாட்டம்

மீண்டும் ‘கிட்ஸ்ஃபெஸ்ட்’ கொண்டாட்டம்

2 mins read
4a064d8a-ee5a-4a54-ab31-e3f182363d1c
‘கிட்ஸ்ஃபெஸ்ட்’ கொண்டாட்டம்.  - படம்: சிங்கப்பூர் அறிவியல் நிலையம்
Google News Preferred Icon

மோனலிசா

குழந்தைகள் விரும்பும் வருடாந்திர கொண்டாட்டமான ‘கிட்ஸ்ஃபெஸ்ட்’ இவ்வாண்டு பிப்ரவரி மாதம் 1ஆம் தேதியிலிருந்து மார்ச் மாதம் 3ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

குழந்தைகள் தங்கள் குடும்பத்துடன் கொண்டாடி மகிழும் பல்வேறு நிகழ்வுகள் இவ்வாண்டும் இடம்பெறுகின்றன. குழந்தைகள் புத்தகத்திலிருந்து நான்கு கதைகள் மேடை நாடகமாக அரங்கேறுகின்றன. இந்த நாடகங்கள் விக்டோரியா அரங்கில் நடைபெறுகின்றன.

2012ஆம் ஆண்டிலிருந்து ஏபிசி ப்ரோடக்ஷன்ஸ் நிறுவனத்தினால் சிங்கப்பூரிலும் ஹாங்காங்கிலும் இந்த கொண்டாட்டம் ஆண்டுதோறும் நடைபெற்றுவருகிறது.

கதை சொல்லுதல், பாடல்கள், மேடை ஏற்பாடுகள், அலங்காரங்கள் என பிள்ளைகளின் மனம் கவரும் வண்ணம் பல்வேறு சுவாரசிய அங்கங்கள் இந்த நாடகங்களில் இடம்பெறுகின்றன.

அரங்கேறவுள்ள நான்கு நாடகங்கள்:

ஸ்பாட்ஸ் பெர்த்டே பார்ட்டி

ஒரு நாய்குட்டியையும் அதன் நண்பர்களையும் சுற்றி வரும் இந்த கதை பிப்ரவரி 15ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை விக்டோரியா அரங்கில் இடம்பெறும்.

தி வெரி ஹங்ரி கேட்டர்பில்லர் ஷோ

இந்த நாடகத்தில் 75திற்கும் மேற்பட்ட பொம்மலாட்ட பொம்மைகள் பயன்படுத்தப்படுகின்றன.

ஐ பிலீவ் இன் யூனிகார்ன்ஸ்

புத்தகங்களின் மகிமையையும் கதைசொல்லும் விதத்தையும் யூனிகார்ன் பற்றிய தகவல்களையும் இந்த நாடகம் பிரதிபலிக்கும்.

வீ ஆர் கோயிங் ஆன் அ பியர் ஹண்ட் (நாங்கள் கரடி வேட்டைக்கு போகிறோம்)

இந்த நகைச்சுவை நாடகம் பிள்ளைகள் ரசிக்கும் வண்ணம் அமைந்துள்ளது.

நாடகங்களுக்கான நுழைவுச்சீட்டு கட்டணங்களுக்கும் இதர தகவலைகளுக்கும் https://www.kidsfest.com.sg/ இணையதள முகவரியை நாடலாம்.

monolisa@sph.com.sg

குறிப்புச் சொற்கள்