படிக்க, சிறக்க: தெளிவுபெற, வண்ணம் தீட்டலாம்

படிக்க, சிறக்க: தெளிவுபெற, வண்ணம் தீட்டலாம்

1 mins read
fcca462e-f621-4e98-9435-3e9de7e4d6a3
மாணவர்களின் நல்வாழ்வுக்கான சிறப்புத் தொடர் - படம்: செயற்கை நுண்ணறிவு
Google News Preferred Icon

தொடக்கநிலை நான்கு பயிலும் திவ்யா கார்த்திகேயன், அமைதியான குணம் கொண்டவர்.

வகுப்பில் ஆசிரியர்கள் பாடம் நடத்தும்போது அவர் கூர்ந்து கவனமாகக் கேட்பார்.

மேலோட்டமாக இல்லாமல், ஒவ்வொரு பாடத்தையும் நன்றாகப் புரிந்துகொள்ள அவர் முயற்சி எடுப்பார்.

-

திவ்யா திறமையானவர் மட்டுமன்றி பண்புள்ளவராகவும் திகழ்கிறார். எனவே, ஆசிரியர்களும் சக மாணவர்களும் அவரை மதிக்கின்றனர்.

ஆயினும், திவ்யாவின் மனத்தில் சிறிதளவு பதற்றமும் இழையோடி வந்தது.

அவர் சில நேரங்களில் உறங்குவதற்குச் சிரமப்பட்டார்.

முடிவில் திவ்யா, பள்ளி ஆசிரியர் ஒருவரிடம் தமது பிரச்சினையை எடுத்துக் கூறினார்.

வண்ணம் தீட்டும்படி அந்த ஆசிரியர் திவ்யாவுக்குப் பரிந்துரைத்தார்.

தீட்டப்படும் வண்ணங்கள் பார்ப்பதற்கு நன்றாக இருக்கின்றனவா, இல்லையா என்ற கவலையே வேண்டாம் என்று அந்த ஆசிரியர் கூறினார்.

வாரத்துக்கு ஒருமுறை வண்ணம் தீட்ட திவ்யா தொடங்கினார். யார் என்ன சொன்னாலும் வண்ணம் தீட்டுவதைக் கைவிடப்போவதில்லை என உறுதிபூண்டார்.

இறுதியில் திவ்யா மேற்கொண்ட நல்ல பழக்கம் பலன் தந்தது. நிம்மதியுடன் அவரால் படிக்கவும் தூங்கவும் முடிந்தது.

குறிப்புச் சொற்கள்