புத்தக வாசிப்புக்காகக் குரல்கொடுத்த பிரதமர்

புத்தக வாசிப்புக்காகக் குரல்கொடுத்த பிரதமர்

1 mins read
0080fa07-2e1a-48ad-8fe4-a0edf1ed4f56
சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங். - படம்: டிக்டாக்
Google News Preferred Icon

வேலைகள் எவ்வளவு இருந்தாலும், முடிந்தவரை நூல்களைப் படிப்பதற்குத் தாம் நேரம் ஒதுக்குவதாகப் பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியுள்ளார்.  இது குறித்த திரு வோங்கின் காணொளி, சமூக ஊடகத் தளங்களில் கடந்த வாரம் வெளியானது.  கடந்த வியாழக்கிழமை உலகப் புத்தக தினத்தை முன்னிட்டு வெளியிட்ட காணொளியில், புத்தகம் வாசிப்பதால் ஏற்படும் நன்மைகளைத் திரு வோங் விளக்கினார்.

“நான் வளர்ந்த காலத்தில், வாரத்திற்கு ஒருமுறை என்ற அளவில் மரின் பரேட் பொது நூலகத்திற்குச் செல்வேன்,” என்று அவர் கூறினார்.

தற்போது தாம் பெரும்பாலும் மின்னூல்களை வாசிப்பதாகத் திரு வோங் குறிப்பிட்டார். அச்சிடப்பட்ட நூல்களோ அல்லது மின்னூல்களோ எதனை வாசித்தாலும் அது நல்லது என்றார் பிரதமர். “நீங்கள் எந்த முறையில் வாசித்தாலும் - கற்கவும், சிந்திக்கவும், வளரவும் புத்தகம் வாசிப்பதே சிறந்த வழி,” என்று அவர் வலியுறுத்தினார்.

குறிப்புச் சொற்கள்
புத்தகம்பிரதமர்லாரன்ஸ் வோங்