மண்ணுக்கு அடியில் ஒரு புதையல்

மண்ணுக்கு அடியில் ஒரு புதையல்

2 mins read
b7953390-7d0a-4260-8e15-af0d25e9235a
சுவை தவிர, வேர் காய்கறிகள் உடலுக்கு அதிக ஆற்றலைத் தரக்கூடியவை. - படம்: பிக்ஸாபே

பூமிக்கு அடியில் தங்கம், வைரம் எனப் புதையல் இருக்கும் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால், நம் உடலுக்குத் தேவையான சூப்பர் பவர் தரும் காய்கறிகளும் மண்ணுக்கு அடியில்தான் வளர்கின்றன என்று உங்களுக்குத் தெரியுமா? அந்த ‘வேர் காய்கறி’ பற்றித் தெரிந்து கொள்ளலாம்! உருளைக்கிழங்கு உங்களுக்கு ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ், சிப்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும் அல்லவா? அவை எல்லாமே இந்த உருளைக்கிழங்குதான்! சிறப்பு: இதில் ‘மாவுச்சத்து’ நிறைய உள்ளது. இதைச் சாப்பிட்டால் நீங்கள் ஓடி, ஆடி விளையாட நிறைய சக்தி கிடைக்கும். மசித்துச் சாப்பிட்டாலும் ருசி, வறுத்துச் சாப்பிட்டாலும் ருசி! சின்ன வெங்காயம் சமையலில் இந்தச் சின்ன வெங்காயம் இல்லாமல் ருசியே இல்லை! சிறப்பு: இது உணவுக்கு நல்ல வாசனையைக் கொடுக்கும். அதுமட்டுமல்ல, உங்கள் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுத்து, நோய்க் கிருமிகளை விரட்டி அடிக்கும்! இஞ்சி - பூண்டு இவர்கள் இருவரும் நம் உடலுக்கு மருத்துவர்கள் போல் செயல்படுவார்கள். சிறப்பு: நீங்கள் சாப்பிட்ட சாப்பாடு ஜீரணமாக இவை உதவும். முக்கியமாக, சளி அல்லது இருமல் வந்தால், இஞ்சிச் சாறு குடித்தால் போதும். இருமல் பயந்து ஓடியே போய்விடும். கருணைக்கிழங்கு பார்க்கக் கொஞ்சம் கரடுமுரடாக இருந்தாலும், இது உடலுக்கு மிகவும் நல்லது. சிறப்பு: உங்களுக்கு வயிறு வலி வராமலும், மலச்சிக்கல் வராமலும் இது பாதுகாக்கும். இதை வறுவல் செய்து சாப்பிட்டால் ருசியாக இருக்கும்! சேப்பங்கிழங்கு வேகவைத்துச் சாப்பிட்டால் அல்வா மாதிரி இருக்கும். சிறப்பு: இது உங்கள் இதயத்திற்கு மிகவும் நல்லது. முக்கியமாக, வயிற்றில் இருக்கும் கெட்டப் பூச்சிகளை அழித்துவிடும். நீங்கள் உடல் பலத்துடன் உயரமாக வளர இது மிகவும் உதவும். இந்தக் காய்கறிகள் எல்லாம் மண்ணுக்கு அடியில் வளர்வதால், பூமியில் இருக்கிற தாது உப்புக்கள் (Minerals) இதில் நிறைய உள்ளன. தினமும் இல்லையென்றாலும் அடிக்கடி இந்த ‘அண்டர் கிரவுண்ட் காய்கறிகளை’ உங்கள் அம்மாவைச் சமைக்கச் சொல்லி சாப்பிடுங்கள். நீங்களும் பலன் அடைவீர்கள்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்