சிறுவர்களுக்காகக் காத்திருக்கும் ‘ஈஸ்டர்’ குதூகலம்

சிறுவர்களுக்காகக் காத்திருக்கும் ‘ஈஸ்டர்’ குதூகலம்

1 mins read
26cabac6-f29a-491d-899c-62fdba12ceff
மண்டாய் வனவிலங்கு காப்பகத்தில் “ஈஸ்டர் எக்ஸ்-ட்ராவகன்சா” எனும் மாபெரும் ‘ஈஸ்டர்’ கொண்டாட்டங்கள் சிறுவர்களுக்காகக் களைகட்டவுள்ளன. - படங்கள்: மண்டாய் வனவிலங்கு குழு
Google News Preferred Icon

மண்டாய் வனவிலங்குக் காப்பகத்தில் மார்ச் 14 முதல் ஏப்ரல் 12 வரை “ஈஸ்டர் எக்ஸ்-ட்ராவகன்சா” எனும் மாபெரும் ‘ஈஸ்டர்’ கொண்டாட்டங்கள் சிறுவர்களுக்காக களைகட்டவுள்ளன.

மிகப்பெரிய ‘ஹாட்-எக் பலூன் காச்சபான்’ இயந்திரத்துடன் கிட்டத்தட்ட 100 பிரம்மாண்ட முட்டை அலங்காரங்கள் இவ்வாண்டின் ‘ஈஸ்டர்’ கொண்டாட்ட சிறப்பம்சங்களாகும்.

முதன்முறையாக பறவைகள் மகிழ்வனம், சிங்கப்பூர் விலங்கியல் தோட்டம் மற்றும் மண்டாய் வனவிலங்கு மேற்கு எனப் பல இடங்களுக்கு இக்கொண்டாட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

சிறுவர்கள் முட்டை வேட்டை, முத்திரை சேகரிக்கும் விளையாட்டுகளில் ஈடுபட்டு பரிசுகளை வெல்லலாம்.
சிறுவர்கள் முட்டை வேட்டை, முத்திரை சேகரிக்கும் விளையாட்டுகளில் ஈடுபட்டு பரிசுகளை வெல்லலாம். - படம்: மண்டாய் வனவிலங்கு குழு

சிறுவர்கள் முட்டை வேட்டை, முத்திரை சேகரிக்கும் விளையாட்டுகளில் ஈடுபட்டு பரிசுகளை வெல்லலாம். விலங்குகளும் உற்சாகமடையும் வகையில், பென்குயின், ஹார்ன்பில் பறவை இனங்களுக்கு சிறப்பு ‘ஈஸ்டர்’ விருந்துகள் வழங்கப்படும்.

‘தி அனிமல் புராஜெக்ட்’ சமூக அமைப்பின் சிறப்புத் தேவையுடைய கலைஞர்கள் வடிவமைத்த 100 கலைநயமிக்க முட்டை அலங்காரங்களையும் பார்வையாளர்கள் கண்டு மகிழலாம்..

சிறப்புச் சலுகையாக ஒரு பெரியவர் வாங்கும் நுழைவுச்சீட்டுக்கு ஒரு சிறுவர்/சிறுமிக்கு இலவச அனுமதி. அத்துடன், $10 மதிப்புள்ள சலுகை பற்றுச்சீட்டுகளும் வழங்கப்படும்.

கூடுதல் விவரங்களுக்கு **birdparadise.com.sg/EasterEggstravaganza** இணையத்தளத்தை அணுகவும்.

குறிப்புச் சொற்கள்