வாத்துகளால் பரிசுகளை வென்றனர்

வாத்துகளால் பரிசுகளை வென்றனர்

1 mins read
63097e50-f1ec-4c98-90f3-aaab0b081a40
எண்கள் கொண்ட பொம்மை ரப்பர் வாத்துகளை நீரில் கொட்டுகிறார்கள். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ்டைம்ஸ்
multi-img1 of 2
Google News Preferred Icon

ரிசோர்ட்ஸ் வேர்ல்ட் செந்தோசாவின் அட்வென்சர் கோவ் நீர்ப் பூங்காவில் உள்ள 620 மீட்டர் நீளமுள்ள அட்வென்சர் நதியில் ஜூலை 22ஆம் தேதி ஏறக்குறைய 20,000க்கும் மேற்பட்ட மஞ்சள் நிற ரப்பர் பொம்மை வாத்துகள் போட்டிக்கு மிதக்கவிடப்பட்டன.

ஒவ்வாரு வாத்துப் பொம்மைக்கு அடியிலும் ஒரு தனிப்பட்ட எண் இடப்பட்டிருந்தது.

ஜூன் 17 முதல் 21ஆம் தேதி வரை ‘டியான் ஸியாவ் அர்’ செயலி வழியாக ஒரே சீட்டில் அந்த உணவகத்தில் குறைந்தது 60 வெள்ளி செலவழித்தவர்களுக்கு அந்த எண் வழங்கப்பட்டிருந்தது.

எண்கள் கொண்ட வாத்துகளை மிதக்கவிட்டு சுமார் 13 நிமிடங்கள், இரண்டு வினாடிகளில் அந்த ரப்பர் வாத்துப் பொம்மைகள் காற்றினால் ஆடி ஆடி இறுதிக் கோட்டைத் தொட்ட முதல் ஆறு வாத்துகளின் அடியில் குறிப்பிடப்பட்ட எண்கள் கொண்ட வாடிக்கையாளர்களுக்குப் பரிசுகள் கிடைத்தன.

முதலாவதாக வந்த வாத்துப் பொம்மையின் வாடிக்கையாளருக்கு 10,000 வெள்ளியும் இரண்டாவதாக வந்த இரண்டு வாத்துப் பொம்மைகளின் எண்கள் கொண்ட வாடிக்கையாளர்களுக்கு தலா 3,000 வெள்ளியும் அதற்கு அடுத்து வந்த மூன்று பொம்மை வாத்துகளின் வாடிக்கையாளர்களுக்கு தலா ஆயிரம் வெள்ளியும் பரிசாக வழங்கப்படுகிறது.

அவர்களைத் தொடர்புகொண்டு பரிசுகளை வழங்க இருக்கிறார்கள்.

குறிப்புச் சொற்கள்
வாத்துசெந்தோசாபரிசு